< Back
மாநில செய்திகள்
மதுரை ஆவினில் விற்ற பாலில் இறந்த நிலையில்  ஈ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
மாநில செய்திகள்

மதுரை ஆவினில் விற்ற பாலில் இறந்த நிலையில் "ஈ" வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
21 Sept 2022 11:04 AM IST

மதுரை அருகே ஆவீன் பாலகத்தில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரை,

மதுரை ஆவின் சார்பில், கவ், கோல்டு, எஸ்.எம்., - நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேல் தயாரிக்கப் படுகின்றன. இவை, 40க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெப்போக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.

ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட, 33வது வழித்தடத்தில் பால் வேன் மூலம் நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை, கீழமாத்துார் உள்ளிட்ட டெப்போக்களில் பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டன.

பல்கலைக்கு அருகே உள்ள டெப்போவில் அரை லிட்டர் எஸ்.எம்., பச்சை நிற பாக்கெட் வாங்கிய பெண் நுகர்வோர், பாக்கெட்டிற்குள், 'ஈ' இறந்து மிதந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். -உடன் டெப்போவில் திருப்பி ஒப்படைத்தார்.இத்தகவல் அறிந்து டெப்போவிற்கு சென்ற ஆவின் அதிகாரிகள், அந்த பாக்கெட்டை பெற்று, 'சம்பந்தப்பட்ட பாக்கெட் குறித்த வீடியோ, போட்டோ இருந்தால் வெளியிட வேண்டாம்' என, டெப்போ உரிமையாளரிடம் அறிவுறுத்தி சென்றனர். பேக்கிங் செய்யும்போது தவறு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்