< Back
மாநில செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
3 July 2023 1:59 AM IST

கும்பகோணத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

கும்பகோணம்:

கும்பகோணம் ராஜன் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் நடக்கிறது. கூட்டத்திற்கு மின்வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்குகிறார்.

இதில் செட்டிமண்டபம், திப்பிராஜபுரம், நாச்சியார்கோவில், செம்மங்குடி, திருவிடைமருதூர், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, கதிராமங்கலம், பந்தநல்லூர், கோணுளாம்பள்ளம். குறிச்சி, திருப்பனந்தாள், சோழபுரம் மற்றும் கும்பகோணம் வடக்கு கோட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்