தென்காசி
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
|கடையநல்லூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
நெல்லை மின்பகிர்மான வட்டம் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கடையநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் அந்த பள்ளிகளின் மின் இணைப்புகளை ஆய்வு செய்து தரமான மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களிடம் மின்சார பாதுகாப்பு மற்றும் மின் சிக்கனம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் மற்றும் அனைத்து மின் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.