< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
|27 Sept 2023 3:57 AM IST
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா தலைமை தாங்கினார். இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மேற்பார்வை பொறியாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்தக்கூட்டத்தில் அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.