< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
மின்நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்
|27 Oct 2023 12:15 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் 30-ந்தேதி நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் மின்சாரம் தொடர்பான குறைகள் இருக்குமானால் இது தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் விருதுநகர் மாவட்ட வட்ட மேற்பார்வையாளர் லதா தலைமையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான குறைகள் குறித்து மனுக்கள் கொடுத்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என கோட்ட பொறியாளர் சின்னத்துரை அறிவித்துள்ளார்.