< Back
மாநில செய்திகள்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தினத்தந்தி
|
10 Oct 2023 12:15 AM IST

மயிலாடுதுறையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாகை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் மின்நுகர்வோர் கலந்துகொண்டு தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம். இதேபோல ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை அன்று மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்