< Back
மாநில செய்திகள்
மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 18-ந் தேதி நடக்கிறது
அரியலூர்
மாநில செய்திகள்

மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 18-ந் தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
15 April 2023 12:14 AM IST

மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18-ந் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அரியலூர் கோட்டம் சார்பாக வருகிற 18-ந் தேதி காலை 11 மணியளவில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், அரியலூர் ராஜாஜி நகர் - காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயனடைந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்