< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மறைமலைநகரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
|8 Aug 2023 3:54 PM IST
மறைமலைநகரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மின்சார வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொத்தேரி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது மின்சாரம் சம்பந்தமான புகார்களை தெரிவிப்பதற்காக நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் மறைமலைநகர் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று மறைமலைநகர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.