< Back
மாநில செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தினத்தந்தி
|
9 Aug 2023 12:28 AM IST

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் நான்குச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சேகர் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யக்கோரி தகுந்த ஆவணங்களுடன் மனு அளித்தால், உடனடியாக விசாரணை செய்யப்பட்டு, மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்து தரப்படும். இது தொடர்பான சிறப்பு முகாம் வருகிற 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை மின் நுகர்வோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார், உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் மின்பொறியாளர்கள், மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டனர். மின்நுகர்வோர்களிடம் இருந்து 12 மனுக்கள் பெறப்பட்டு கோரிக்கை-குறைகளை நிவர்த்தி செய்திட உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்