சுங்ககட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
|சுங்கக்கட்டண உயர்வினால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.அதாவது சுங்கக்கட்டணம் உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ. 50 முதல் ரூ. 150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதாரத்தில் கூடுதல் சுமை ஏற்படும்.இக்கட்டண உயர்வால் சரக்குக்கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்துக்கான செலவும் அதிகமாகும்.சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயரும். இதனால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.குறிப்பாக சுங்கக்கட்டண உயர்வினால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற, மறுபரிசீலனை செய்ய வேண்டும் . என தெரிவித்துள்ளார்.