< Back
மாநில செய்திகள்
20 மீட்டர் உயரம் பறந்த புழுதி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

20 மீட்டர் உயரம் பறந்த புழுதி

தினத்தந்தி
|
24 Aug 2023 12:15 AM IST

20 மீட்டர் உயரம் புழுதி பறந்தது.

முதுகுளத்தூர்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முதுகுளத்தூர், தேரிருவேலி, திரு உத்தரகோசமங்கை, ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றது. வழக்கமாக ஆடி மாதம் பிறந்ததுமே வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காற்று வீசத்தொடங்கிவிடும். ஆனால் தற்போது வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகின்றது.

இதனிடையே நேற்று முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி-தாழியாரேந்தல் இடைப்பட்ட பகுதியில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் நேற்று காலை 11 மணிக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் சுழல் காற்று வீசியது. ஐந்து நிமிடம் மட்டுமே இந்த சுழல் காற்று வீசியது. விவசாய நிலத்தில் ஒரு இடத்தில் இருந்து சுழல் காற்றானது சுமார் 50 மீட்டர் தூரம் வரையிலும் சுழல் காற்றாக வீசியபடி சென்றது. அப்போது தரையில் கிடந்த மண் முழுவதும் புழுதியாக பறந்து மேல் நோக்கி பறந்து சென்றது. சுழல் காற்று வீசிய போது தரையிலிருந்து சுமார் 20 மீட்டர் உயரம் வரையிலும் மேல் நோக்கி புழுதியாக பறந்த படி வீசியது. இதை அந்த சாலை வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்