< Back
மாநில செய்திகள்
குப்பைகளை அகற்றாத கடைகளுக்கு அபாரதம்
மதுரை
மாநில செய்திகள்

குப்பைகளை அகற்றாத கடைகளுக்கு அபாரதம்

தினத்தந்தி
|
24 Aug 2022 12:21 AM IST

திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் ஊராட்சியில் குப்பைகளை முறையாக அகற்றாத 4 கடைகளுக்கு கலெக்டர் அனிஷ்சேகர் அபராதம் விதித்தார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் ஊராட்சியில் குப்பைகளை முறையாக அகற்றாத 4 கடைகளுக்கு கலெக்டர் அனிஷ்சேகர் அபராதம் விதித்தார்.

நம்ம ஊரு சூப்பரு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட வலையங்குளம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் இயக்க விழிப்புணர்பு பிரசாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு பிரிவு) உமா மகேஸ்வரி, திருப் பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர், ஆணையாளர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி தலைவர் முத்துப்பிள்ளை பெருமாள் வரவேற்றார். மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளின் தூய்மை விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பசுமையும் தூய்மையும் நமதாக்கி சுகாதாரம் சூப்பரு, சுற்றுச்சூழல் சூப்பரு, நம்ம ஊரு சூப்பரு என்று உருவாக்குவோம் என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

4 கடைக்கு அபராதம்

இந்த நிலையில் சில கடைகளை கலெக்டர் அனிஷ்சேகர் திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது முறையாக குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரம் கேள்விக்குறியான நிலையை கண்டார். இதனையடுத்து அவர் 4 கடைகளுக்கும் உடனடியாக அபாரதம் விதித்தார். இதற்கிடையே வலையங்குளம் தெருக்களில் கலெக்டர் அனிஷ் சேகர் நடந்து சென்றார். அப்போது தெருவில் குப்பையாக கிடந்த காலி பாட்டில்களை எடுத்து அப்புறப்படுத்தினார். நிகழ்ச்சியில் சேர்மன் வேட்டையன், திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், காளியப்பன், ஊராட்சி துணை தலைவர் முத்து ராமன், ஊராட்சி செயலர் கிருஷ்ணன் ஆகியோர ்கலந்து கொண்டனர்.

கண்மாயில் ஆய்வு

இதனைத் தொடர்ந்து எலியார்பத்தியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் ஆட்டுகொட்டாரத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். ஊராட்சி மன்ற தலைவர்கண்ணன், துணைத் தலைவர் விஜயகுமார் ஊராட்சி செயலர் நடுக்காடு மற்றும் வார்டுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விராதனூர் ஊராட்சி சாத்தான் குளத்தில அம்ருத் சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சத்தில் நடைபெற்ற வரும் கண்மாய் ஆழப்படுத்தும் பணியினையும், புதிதாக கட்டப்பட்டு உள்ள அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் வாசுதேவன், துணைத்தலைவர் பரமேசுவரி, ஊராட்சி செயலாளர் பாலு, என்ஜினீயர்கள் கண்ணன்.நேரு, சுகன்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்