ராமநாதபுரம்
ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் குப்பை அகற்றப்படுமா?
|ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் போலீசாருக்கு ஆயுதப்படை வளாகம் மற்றும் ஆயுதப்படை குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்தநிலையில் காவல் துறை சார்ந்த அலுவலக கட்டிடங்கள், காவல் நிலையங்களை தூய்மையாக பராமரித்து, பாதுகாக்க வேண்டும். இதற்காக மாதத்தின் 2-வது சனிக்கிழமை, தூய்மை தினமாக கடைப்பிடிக்க வேண்டும். தூய்மை பணிகளை கண்காணித்து, படத்துடன் அறிக்கை அளிக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் தூய்மை பணி நடைபெற்றது. ஆனால், ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் இந்த தூய்மை பணி முறையாக நடைபெறாமல் குப்பைகளாக காட்சி அளிக்கின்றன. எனவே, மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் டி.ஜி.பி.உத்தரவின்படி சுத்தம் செய்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.