< Back
மாநில செய்திகள்
சென்னை-நெல்லை இடையே தசரா சிறப்பு ரெயில்; 12 மணி நேரத்தில் முன்பதிவு நிறைவு
மாநில செய்திகள்

சென்னை-நெல்லை இடையே தசரா சிறப்பு ரெயில்; 12 மணி நேரத்தில் முன்பதிவு நிறைவு

தினத்தந்தி
|
20 Oct 2023 9:58 PM IST

சென்னை-நெல்லை இடையிலான தசரா சிறப்பு ரெயிலில் 12 மணி நேரத்தில் முன்பதிவு நிறைவடைந்தது.

சென்னை,

தசரா விழாவையொட்டி சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அந்த ரெயில் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 10.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, நாளை(சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு நெல்லை சென்று சேரும் என அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு வெளியான 12 மணி நேரத்தில், அனைத்து இருக்கைகளுக்கும் முன்பதிவு நிறைவடைந்தது. இதே போல் நெல்லையில் இருந்து 24-ந்தேதி மாலை சென்னைக்கு புறப்படும் சிறப்பு ரெயிலின் முன்பதிவும் நிறைவடைந்தது.

நெல்லை-சென்னை இடையிலான பெரும்பாலான ரெயில்களில் ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், சிறப்பு ரெயிலிலும் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்