< Back
மாநில செய்திகள்
கோவில்களில் தசரா விழா
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கோவில்களில் தசரா விழா

தினத்தந்தி
|
26 Oct 2023 1:00 AM IST

அம்பை பகுதியில் அம்மன் கோவில்களில் தசரா விழா நடைபெற்றது.

அம்பை:

அம்பை பகுதியில் கோவில்களில் தசரா விழா நடைபெற்றது. இதையொட்டி அம்பை துர்க்கை அம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், சோலைபுரம் முத்தாரம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைகக்ப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் துர்க்கை அம்மன், காமாட்சி அம்மன், முத்தாரம்மன், சோலைபுரம் முத்தாரம்மன் ஆகிய நான்கு அம்மன்களும் சப்பரத்தில் எழுந்தருளி அம்பை பூக்கடை பஜாரில் அமைந்துள்ள உச்சிமாகாளியம்மன் கோவிலில் முன்பு சிறப்பு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்