< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தசரா திருவிழாவின் 2-வது நாள் - குலசேகரப்பட்டினம் முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
|27 Sept 2022 10:03 PM IST
குலசை முத்தாரம்மனுக்கு பால், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த தசரா திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
அதன்படி திருவிழாவின் 2-வது நாளான இன்று அபிஷேக மண்டபத்தில் 8 வகையான கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு, அதில் புனித நீர் ஊற்றப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முத்தாரம்மனுக்கு பால், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.