< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
|27 May 2022 2:54 PM IST
காவேரிப்பட்டணம் அருகே நடைபெற்ற துரியோதனன் படுகளம் நாடக நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கவுண்டனூர் கிராமத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக நாட்டு புற கலைகளை போற்றும் விதமாக 18 நாட்களுக்கு நாடகம் நடைபெறும்.
இதில் இறுதி நாளில் துரியோதன் படுகளம் நாடகம் நடைபெறும். அப்போது பீமன் மற்றும் துரியோதனன் ஆகியோருக்கு சண்டை நடைபெறும். அதில் துரியோதனன் இறந்து விடுவான். இது போன்ற நாடகங்கள் நேற்று இரவு குட்டி கவுண்டனூர் கிராமத்தில் நடைப்பெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.