< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
|5 Jun 2022 10:54 PM IST
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் தீ மிதித்தனர்.
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 15 நாட்கள் நடைபெறும் தீமிதி திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அததொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரத்தில் திரவுபதி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காப்புக்கட்டிய ஆண், பெண், குழந்தை என 300-க்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து வாண வேடிக்கை நடைபெற்றது.