< Back
மாநில செய்திகள்
வயலூர் திரெளபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி...!
மாநில செய்திகள்

வயலூர் திரெளபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி...!

தினத்தந்தி
|
22 Jun 2022 9:44 AM IST

வயலூர் திரெளபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேத்துப்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வயலூர் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக கோவில் முன்பு களிமண்ணால் 33 அடி துரியோதனன் சிலை அமைக்கப்பட்டது. பஞ்ச வர்ணம் பூசி நாடக நடிகர்கள் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடத்தி காண்பித்தனர்.

இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு துரியோதனன் படுகள நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்