< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
|20 Jun 2022 11:55 PM IST
சோளிங்கர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் தீமிதி திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான வில்வலைப்பு, அர்ஜுனன் தபசு, அரவான் கடபலி, கட்டைக் கூத்து, மகாபாரத நாடகம் ஆகியவை நடந்தது.
கடைசிநாளில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சுவாமிக்கு அக்னி குண்டத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோர் காப்புக் கட்டி விரதம் இருந்து தீமிதித்தனர். தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.