< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
|21 July 2022 9:33 PM IST
போடி அருகே கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார்
போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டி நேதாஜி தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி அம்சமணி (வயது 47). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று போடி டி.வி.கே.கே நகரில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சுவர் இடிந்து அம்சமணி மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் போடி நகர் போலீசார் கட்டிட காண்டிராக்டர் காமாட்சி (55), மேற்பார்வையாளர் மதன் கோபால கிருஷ்ணன் (35), பாண்டி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.