< Back
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
மாநில செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
26 July 2024 9:52 PM IST

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

திருச்சி,

ஆடி வெள்ளியை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருச்சியில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும், துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கோவிலுக்கு வந்த அவர் கொடி மரத்தை சுற்றி வந்து வணங்கினார். தொடர்ந்து மூலஸ்தான அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்