< Back
மாநில செய்திகள்
துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வேலூர்
மாநில செய்திகள்

துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
13 July 2022 5:42 PM GMT

ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீட வளாகத்தில் துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து சிறப்பு யாகம், பூஜைகள், பூர்ணாஹூதி நடந்தது. பின்னர் யாக சாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கலச புனிதநீர் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில், சக்தி அம்மா கலந்து கொண்டு துர்க்கை அம்மன் சிலை, கோவில் கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். இதே போன்று நாராயணி அம்மன் பழைய கோவில் கோபுர கலசம் மீதும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் அறங்காவலர் சவுந்தர்ராஜன், நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீட மேலாளர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்