முதல்-அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த துரை வைகோ
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறி, வாழ்த்து பெற்றதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளருமான துரை வைகோ, சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். முன்னதாக நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் துரை வைகோ தனது வாக்கினை செலுத்தினார்.
தொடர்ந்து சென்னை வந்த அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள துரை வைகோ, நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கும், தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான களப்பணி ஆற்றியதற்கும் நன்றி தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் முதல்-அமைச்சர் தன்னுடைய முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியில் தொடங்கியதற்கு நன்றி கூறி, வாழ்த்தும் பெற்றுக் கொண்டதாகவும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.