< Back
மாநில செய்திகள்
துரைமுருகனை இடைக்கால முதல்-அமைச்சராக்க வேண்டும் - சீமான்
மாநில செய்திகள்

துரைமுருகனை இடைக்கால முதல்-அமைச்சராக்க வேண்டும் - சீமான்

தினத்தந்தி
|
26 Aug 2024 3:20 PM IST

இப்போது இருக்கிற தலைவர்களில் அதிபுத்திசாலி எடப்பாடி பழனிசாமிதான் என்று சீமான் கூறியுள்ளார்.

திருச்சி,

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதால், மூத்த அமைச்சரான துரைமுருகனை இடைக்கால முதல்-அமைச்சராக்க வேண்டும். ரஜினிகாந்த் மற்றும் துரைமுருகன் பேசியது நகைச்சுவைக்காகத்தான். இப்போது இருக்கிற தலைவர்களில் அதிபுத்திசாலி எடப்பாடி பழனிசாமிதான். அவரை தற்குறி என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசக் கூடாது.

பா.ஜ.க. தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் போன்ற தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்காமல், தமிழரல்லாத எல். முருகனுக்கு மீண்டும் மத்திய இணை மந்திரி பதவியை கொடுத்தது ஏன்?

ஐ.பி.எஸ். படித்த திருச்சி எஸ்.பி. வருண்குமார் அவரது வேலையை மட்டும் பார்க்க வேண்டும். தி.மு.க.வில் வேலை செய்ய வேண்டும் என்றால் அந்த ஐ.டி. விங்கில் வருண்குமார் சேர்ந்து கொள்ளட்டும். எனது வரிப்பணத்தில் இருந்து ஊதியம் பெறும் வருண்குமார் ஒழுங்காக அவரது வேலையை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்