ஈரோடு
விநாயகர் சதுா்த்தியைெயாட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
|விநாயகர் சதுா்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோபி
விநாயகர் சதுர்த்தியை யொட்டி நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது.
கோபி ஸ்ரீ நகரில் உள்ள வன்னி மர விநாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து வலம்புரி சங்காபிஷேம் நடந்தது. பின்னர் விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு சாமிைய வழிபட்டனர்.
இதேபோல் கோபி வேலு மணி நகரில் உள்ள சக்தி விநாயகர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர், கச்சேரி மேடு பகுதியில் உள்ள விநாயகர், நகராட்சி பூங்கா பகுதியில் உள்ள விநாயகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை சிவசித்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது.
மேலும் சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோவில், வேணுகோபாலசாமி கோவில், வடக்குப்பேட்டை மாரியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில்களில் விநாயகர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,
அந்தியூர்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள விநாயகருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அருகம்புல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை வழிபட்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி முத்து விநாயகர் கோவில், தண்டாயுதபாணி கோவில், அண்ணாமலையார் கோவில், காமாட்சி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். இதையொட்டி தண்டாயுதபாணி கோவிலில் விநாயகர் வீதி உலா நடந்தது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் உள்ள ஆதி விநாயகர் சன்னதியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது விநாயகருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.
கொடுமுடி
கொடுமுடியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி கோவிலுக்கு முன்பாக உள்ள முக்தி விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல் மார்க்கெட் பகுதியில் உள்ள இருமுக கணபதி கோவில், மணிக்கூண்டு செல்வ விநாயகர் கோவில், வடக்குத்தெரு ஆதி விநாயகர் கோவில், காங்கேயம் சாலையில் உள்ள ராஜகணபதி கோவில், முத்துநகர் விஜயகணபதி கோவில் உள்பட சோளகாளிபாளையம், வருந்தியபாளையம், சாலைப்புதூர், ஒத்தக்கடை, தாமரைப்பாளையம், வடக்கு புதுப்பாளையம், காசிபாளையம் மற்றும் வெங்கம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.