< Back
மாநில செய்திகள்
ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால் த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது
மாநில செய்திகள்

ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால் த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது

தினத்தந்தி
|
8 March 2024 7:32 PM IST

தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேருவதற்கான உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்த நடிகர் விஜய், கட்சியின் முதல் நபராக சேர்ந்தார். மேலும், விருப்பப்படுவர்கள் அனைவரும் கட்சியில் இணையுமாறும் வீடியோ வாயிலாக விஜய் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக பதிவு செய்ய முயன்றுள்ளனர். இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்