< Back
மாநில செய்திகள்
சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்.!
மாநில செய்திகள்

சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்.!

தினத்தந்தி
|
21 Oct 2023 9:31 PM IST

கூடுவாஞ்சேரி அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் அதிக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், தற்போது தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் மற்றும் சென்னை புறநகர் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது. ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், ரெயில் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்