< Back
மாநில செய்திகள்
காவிரியில் நீர்வரத்து குறைந்ததால்  நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து தொடக்கம்
ஈரோடு
மாநில செய்திகள்

காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து தொடக்கம்

தினத்தந்தி
|
24 July 2022 10:41 PM IST

காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து தொடங்கியது.

அம்மாபேட்டை

கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், கடந்த 16-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் அதில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் அப்படியே திறக்கப்பட்டது. இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வெள்ள அபாயம் நிலவியதால் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து கடந்த 16-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஆற்றில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால் நேற்று பிற்பகல் முதல் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது. கடந்த 8 நாட்களாக நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக 8 கிலோமீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்