< Back
மாநில செய்திகள்
வரத்து குறைந்ததால்சின்ன வெங்காயம் விலை உயர்வு: கிலோ ரூ.74-க்கு விற்பனை
தேனி
மாநில செய்திகள்

வரத்து குறைந்ததால்சின்ன வெங்காயம் விலை உயர்வு: கிலோ ரூ.74-க்கு விற்பனை

தினத்தந்தி
|
9 Oct 2023 12:15 AM IST

கம்பம் உழவர் சந்தையில் வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து கிலோ ரூ.74-க்கு விற்பனை ஆனது.

கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது வெங்காயம் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இந்த வெங்காயத்தை விவசாயிகள் ஆண்டிப்பட்டி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக செல்கின்றனர். சில விவசாயிகள் நேரடியாக கம்பம் உழவர் சந்தைக்கு கொண்டு சென்று நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வெங்காயம் வரத்து குறைவாக இருந்தது. இதனால் கடந்த வாரம் கிலோ ரூ.20-க்கு விற்ற வெங்காயம் நேற்று ரூ.74-க்கு விற்பனையானது. வெங்காயம் விலை மீண்டும் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை (கிலோவில்) விவரம் வருமாறு:- கத்தரிக்காய் ரூ.35,வெண்டைக்காய் ரூ.30, தக்காளி ரூ.24, சுரைக்காய் ரூ.15, பீட்ரூட் ரூ.20, நூக்கல் ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.18, பெரியவெங்காயம் ரூ.35, பீர்க்கங்காய் ரூ.32-க்கு விற்பனையானது.

இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் விளைச்சல் இல்லாததால் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை அதிகரித்து வருகிறது. வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தக்காளியும் வரத்து குறைந்து வருகிறது. ஓரிரு வாரங்களில் அதன் விலையும் உயர வாய்ப்புள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்