< Back
மாநில செய்திகள்
3-வது நாளாக நீடிக்கும் மீன்பிடித்தடையால் ரூ.30 கோடி வரை வர்த்தகம் பாதிப்பு..!
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

3-வது நாளாக நீடிக்கும் மீன்பிடித்தடையால் ரூ.30 கோடி வரை வர்த்தகம் பாதிப்பு..!

தினத்தந்தி
|
20 July 2023 1:34 PM IST

ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று, கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.

பலத்த சூறாவளிக் காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகக் காணப்பட்டு வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல அதிகாரிகள் தடைவிதித்தனர்.

இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 5000-க்கும் அதிகமான விசைப்படகு நாட்டுப் படகு, பைபர் படகுகளும் மீன் பிடிக்கச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்றும் பலத்தச் சூறாவளிக் காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலையானது பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாகச் சீறி எழுந்து வருகின்றது.

இதனால் 3-வது நாளாக ராமேசுவரம், பாம்பன் உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. கடலுக்குச் செல்லாததால் ரூ.30 கோடி வரை வர்த்தகம் பதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்