< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி காரணமாகதேனி எரிவாயு தகன மேடை 3 நாட்கள் மூடல்
|13 Jun 2023 12:15 AM IST
பராமரிப்பு பணி காரணமாக தேனி எரிவாயு தகன மேடை 3 நாட்கள் மூடப்படுகிறது.
தேனி பள்ளிவாசல் தெரு கொட்டக்குடி ஆற்றங்கரையில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் நவீன எரிவாயு தகனமேடை உள்ளது. அல்லிநகரம் கிராமகமிட்டி சார்பில் இந்த தகனமேடை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த தகனமேடையில் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 3 நாட்கள் நடக்கிறது. இதனால் இந்த நாட்களில் தகனமேடை செயல்படாது. இந்த நாட்களில் பழைய நடைமுறையில் விறகு வைத்து எரியூட்டுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிராம கமிட்டியினர் தெரிவித்தனர்.