சென்னை
பராமரிப்பு பணி காரணமாக பெருங்குடி மயானபூமி ஜூன் 15-ந் தேதி வரை இயங்காது - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
|சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி, பெருங்குடி மயானபூமியின் எரிவாயு தகனமேடையை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் திரவ பெட்ரோலிய வாயு தகனமேடையாக மாற்றம் செய்திடவும், பராமரிப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜூன் 15-ந் தேதி வரை மயானபூமி இயங்காது. எனவே, உடல்களை எரியூட்டுவதற்கு பொதுமக்கள் அருகில் உள்ள அடையாறு மண்டலம் பாரதி நகர், பெசன்ட் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம் ஆகிய மயானபூமிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இதேபோல் திரு.வி.க.நகர் மண்டலம், ஜி.கே.எம்.பிரதான சாலை மயான பூமியின் மின்சார தகன மேடையை திரவ பெட்ரோலிய தகன மேடையாக மாற்றம் செய்திட மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூன் 17-ந் தேதி வரை மயானபூமி இயங்காது. எனவே, மேம்பாட்டு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகில் உள்ள நேர்மை நகர் மயான பூமியை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.