< Back
மாநில செய்திகள்
வரத்து குறைவால்  மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்து 500-க்கு விற்பனை:  விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி
மாநில செய்திகள்

வரத்து குறைவால் மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்து 500-க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
4 Dec 2022 12:15 AM IST

தேனி பூ மார்க்கெட்டில் வரத்து குறைவால் மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனி மாவட்டம் கோட்டூர், சீலையம்பட்டி, உப்புக்கோட்டை, வாழையாத்துப்பட்டி, பாலார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மல்லிகை, முல்லை, ஜாதிப் பூ, சம்பங்கி, கனகாம்பரம், செண்டு பூ உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் மார்க்கெட்டில் ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக கனகாம்பரம் விளைச்சல் குறைந்துள்ளது. அதே நேரம் செண்டு பூ, கோழி கொண்டை, மல்லிகை, வாடாமல்லி ஆகிய பூக்கள் நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது,

இதற்கிடையே வரத்து குறைந்ததால் பூக்கள் விலை அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை நிலவரம் (கிலோவில்) வருமாறு:- மல்லிகை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை, ஜாதிப்பூ ரூ.1,000, முல்லை ரூ.1,000, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.200, செவ்வந்தி ரூ.150-க்கு விற்பனை செய்யபடுகிறது. இதுகுறித்து பூ வியாபாரி ஒருவர் கூறுகையில், தற்போது பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. மேலும் சபரிமலை சீசன் காரணமாக பூக்கள் விலை உயா்ந்துள்ளது என்றார்.

மேலும் செய்திகள்