< Back
மாநில செய்திகள்
வரத்து அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

வரத்து அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி

தினத்தந்தி
|
21 May 2023 12:16 AM IST

வரத்து அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் பெரிய அளவிலான மரவள்ளி கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர்.இந்நிலையில் கடந்த வாரம் மரவள்ளிகிழங்கை ஜவ்வரிசி தயார் செய்யும் மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். தற்போது ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.அதேபோல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.16ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்