< Back
மாநில செய்திகள்
பலத்த மழையால் கட்டிட சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது
திருச்சி
மாநில செய்திகள்

பலத்த மழையால் கட்டிட சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது

தினத்தந்தி
|
27 Sept 2022 3:59 AM IST

பலத்த மழையால் கட்டிட சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது.

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. விடிய விடிய சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த இந்த மழையால் ஸ்ரீரங்கத்தில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையம் மற்றும் மூலத்தோப்பில் ஒரு சில குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. வடக்குவாசல் கொள்ளிடக் கரையில் உள்ள விஷ்ணு பாதம் கட்டிடத்தில் தர்ப்பணம் செய்யும் இடத்தில் இருந்த பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து அருகில் இருந்த மாட்டுக்கொட்டகையின் மேல் விழுந்தது. இதில் மாட்டுக்கொட்டகையில் இருந்த ஒரு மாடு இடிபாடுகளிடையே சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி மாட்டை பத்திரமாக மீட்டனர். லேசான காயங்களுடன் மாடு உயிர் தப்பியது.

மேலும் செய்திகள்