< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பலத்த மழையால் தரை இறங்க முடியாமல் 4 விமானங்கள் வானில் வட்டமடித்தன
|4 Nov 2023 3:07 AM IST
டெல்லி, பெங்களூரு, விசாகப்பட்டினம், அந்தமான் ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்த 4 விமானங்கள், பலத்த மழை பெய்ததால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.
மீனம்பாக்கம்,
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது. சென்னை விமான நிலையத்தில் பலத்த மழை காரணமாக பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். டெல்லி, பெங்களூரு, விசாகப்பட்டினம், அந்தமான் ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்த 4 விமானங்கள், பலத்த மழை பெய்ததால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. வானிலை சீரானதும் வானில் வட்டமடித்து பறந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரை இறங்கின. இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, ராஜமுந்திரி, சிலிகுரி, புனே, மும்பை உள்பட 7 விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.