சென்னை
மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
|மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் இன்று முதல் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை தியாகராயநகர் தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சி.ஐ.டி. 1-வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதனால் தெற்கு உஸ்மான் சாலை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) முதல் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. அதன் விவரம் வருமாறு:-
* தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி. 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணமாபேட்டை சந்திப்பு, தெற்கு மேற்கு போக் சாலை, மூப்பராயன் தெரு இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம்.
* தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து வரும் பஸ்கள் தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேட்லி சந்திப்பு, பர்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம்.
* அரங்கநாதன் சுரங்கப்பாதையில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை, சி.ஐ.டி. 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சி.ஐ.டி. நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணாசாலையை அடையலாம்.
* அண்ணாசாலை சி.ஐ.டி 1-வது மெயின் ரோடு சந்திப்பில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராயநகர் பஸ் நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.
மேற்கண்ட தகவல் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.