< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தொடர் மழையால் சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
|12 Dec 2022 12:15 AM IST
தொடர் மழையால் சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலம், புண்ணிய தலமாக இந்த அருவி விளங்குகிறது. ஹைவேவிசில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து வருகிற உபரி நீர் சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த மலைப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து அருவியாக கொட்டுகிறது. மாண்டஸ் புயல் காரணமாக தற்போது அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சுருளி மலைப்பகுதி மற்றும் தூவானம் ஏரியில் இருந்து அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் வாரவிடுமுறையையொட்டி அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அவர்கள் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஆனந்தமாய் குளியல் போட்டனர்.