< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு...!
|10 Dec 2023 12:06 PM IST
மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்கு முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது.
தேனி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்கும் முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த மாதம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 5,899 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று வைகை அணைக்கு நீர் வரத்து 3,486 அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1.11 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 64.73 அடியாக உள்ளது. மேலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.