< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்
|8 Aug 2022 10:10 PM IST
தேவதானப்பட்டி அருகே தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தன
தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம், மேல்மங்கலம், சில்வார்பட்டி,கெங்குவார் பட்டி ஆகிய பகுதிகளில் நெல் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. இதற்கிடையே இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் வயல்களில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. சில வயல்களில் நெல் சிதறி முளைத்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.