< Back
மாநில செய்திகள்
முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி விவசாயி மண்டை உடைப்பு; வாலிபர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி விவசாயி மண்டை உடைப்பு; வாலிபர் கைது

தினத்தந்தி
|
16 March 2023 4:41 PM IST

முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி விவசாயி மண்டையை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விவசாயி மண்டை உடைப்பு

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள ஏகுமதுரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனிசேகர் (வயது 55). இவருக்கும் நாயுடு குப்பம் கிராமத்தை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியரான மூர்த்தி (24) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட முன்விரோதம் காரணமாக விவசாயி முனிசேகரை வழிமறித்து மூர்த்தி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மண்டை உடைந்து பலத்த காயம் அடைந்த விவசாயி முனிசேகர், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை நேற்று கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

இதைபோல் திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன் (40). இவர் கே.ஜி.கண்டிகை மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள் மணிகண்டன் கடையில் கண்ணாடி எடுத்துள்ளனர். கண்ணாடிக்கு உண்டான பணத்தை மணிகண்டன் கேட்டதற்கு கொலை செய்து விடுவேன் என மிரட்டி மணிகண்டனை தாக்கியுள்ளனர். காயமடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மாவட்டம் அடுக்கம்பரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணிகண்டன் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டனை தாக்கிய 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்