< Back
மாநில செய்திகள்
மழை வெள்ள பாதிப்பு: திருநெல்வேலி, தூத்துக்குடியில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு...!
மாநில செய்திகள்

மழை வெள்ள பாதிப்பு: திருநெல்வேலி, தூத்துக்குடியில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு...!

தினத்தந்தி
|
30 Dec 2023 8:00 PM IST

கனமழை, வெள்ளத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி பெரும் பாதிப்பை சந்தித்தது.

திருநெல்வேலி,

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கனமழை, வெள்ளத்தால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. பாதிப்பில் இருந்து இரு மாவட்டங்களும் தற்போது மெல்ல மீண்டு வருகின்றன.

இதனிடையே, கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடியில் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த ஜனவரி 2ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை நீட்டித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் பிப்ரவரி 1ம் தேதி வரை நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகள்