< Back
மாநில செய்திகள்
பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
மாநில செய்திகள்

பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

தினத்தந்தி
|
24 Jun 2023 5:54 AM IST

பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"சிறார் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதான பாலபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் உதயசங்கர், யுவபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் ராம் தங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

குழந்தைகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் "ஆதனின் பொம்மை" என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கர், சிறுவனின் பசியை விவரிக்கும் "திருக்கார்த்தியல்" என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கம் ஆகியோரை வாழ்த்தி மகிழ்கின்றேன்.

எழுத்தாளர்கள் இருவரும் தமிழ் சிறார் இலக்கியத்துக்கு தொண்டாற்றும் வகையில் மேலும் பல படைப்புகளை எழுதி தேசிய விருதுகளைப் பெற வேண்டும் என்றும் இந்த நேரத்தில் பெருமிதத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்."

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்