< Back
மாநில செய்திகள்
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து..!
மாநில செய்திகள்

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து..!

தினத்தந்தி
|
28 Oct 2023 9:34 PM IST

மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் துளசி முருகேசனும், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் தர்மராஜ் சோலைராஜூம் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

சென்னை,

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் மற்றும் துளசி முருகேசன் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் துளசி முருகேசனும், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் தர்மராஜ் சோலைராஜூம் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என இதுவரை 100க்கும் அதிகமான பதக்கங்களை குவித்திருக்கும் இந்திய அணி வீரர்கள், எஞ்சியிருக்கும் போட்டிகளிலும் பதக்கங்களை வெல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்