< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
|25 Feb 2023 1:51 PM IST
தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:-
25-02-2023 முதல் 26-02-2023 வரை:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
27-02-223 முதல் 28-09-2023 வரை:- தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
01-03-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் தெளிவாக காணப்படும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:- ஏதுமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.