< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிகிச்சை அளித்த மருத்துவரை மதுபோதையில் தாக்கிய நபர் - மருத்துவமனையில் பரபரப்பு
|1 Dec 2023 9:59 AM IST
சிவகங்கையில் சிகிச்சை அளித்த மருத்துவரை மதுபோதையில் இருந்த நபர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக்கல்லூரி அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கு பேனரை மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் கிழிக்க முயன்றார். அப்போது படுகாயமடைந்து கீழே விழுந்து கிடந்த அவரை, அருகே இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் போதையில் இருந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை அவர் தாக்கினார். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.