< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் தகராறு: கொத்தனார் அடித்துக்கொலை - வாலிபர் கைது

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

குடிபோதையில் தகராறு: கொத்தனார் அடித்துக்கொலை - வாலிபர் கைது

தினத்தந்தி
|
21 July 2024 5:31 AM IST

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்டார்.

பள்ளிக்கரணை,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (44 வயது). கொத்தனார். அதே தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (25 வயது). இவர், கூரியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சக்திவேல் குடிபோதையில் அதே பகுதியில் தகராறு செய்தார். இதனை செந்தில்குமார் கண்டித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், தனது கையை மடக்கி சக்திவேல் வயிற்றில் ஓங்கி குத்தினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சக்திவேல் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்