< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் தகராறு: தந்தையை கொன்ற மகன்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

குடிபோதையில் தகராறு: தந்தையை கொன்ற மகன்

தினத்தந்தி
|
22 July 2022 9:11 AM GMT

குடிபோதையில் தகராறு செய்த தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் எலுமிச்சம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் சிவலிங்கம் (வயது 48). விவாசய கூலி வேலை செய்து வந்தார். இவர் தினமும் குடித்துவிட்டு அவருடைய மனைவியிடம் சண்டைபோட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவருடைய மகன் விக்னேஷ் (27) இதை தட்டிகேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் சிவலிங்கம் அவருடைய மனைவி மற்றும் மகனுடன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தையால் பேசி சண்டைபோட்டு உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மகன் விக்னேஷ் ஒரு கட்டத்தில் தந்தை சிவலிங்கத்தை தள்ளி விட்டார். இதில் கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உள்ளது.

இதனையடுத்து உடனே அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் இறந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்