அரியலூர்
குடிபோதையில் தீக்குளித்த தொழிலாளி சாவு
|குடிபோதையில் தீக்குளித்த தொழிலாளி உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(வயது 33). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, அவரது மனைவியிடம் மண்எண்ணெய் கேனை கையில் எடுத்துக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, கணவரின் தாயாரை கூப்பிட சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது சண்முகம் தன் மீது தீ வைத்துக் கொண்டு அலறியுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் ஒன்றிணைந்து போர்வையை போர்த்தி தீயை அணைத்து சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.